September 11, 2026

திண்டுக்கல் : சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பழனி அருகே உள்ள அமரபூண்டி
பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். 43 வயதாகும் இவரை, சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் பொதுமக்களின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது எனக் கருதி, அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைத்தார். அதன் பேரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், ஈஸ்வரனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவைப் பிறப்பித்தார்.