“சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று ஏற்கெனவே எழுத்துபூர்வமாக தெரிவித்திருந்தேன். பாஜக மையக்குழு கூட்டத்தில்கூட போட்டியில்லை என்பதை தெரிவித்திருந்தேன்.” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தொடர்நது பேசிய அவர், “நான் எந்த தொகுதியையும் கேட்கவில்லை. காலம் இன்னும் இருக்கிறது; காட்சிகள் மாறும்; நிறைய தேர்தல்கள் வரத்தான் போகிறது. சட்டமன்ற தேர்தலில் பரப்புரை செய்வதுதான் எனது பணி/” என்று அண்ணாமலை திட்டவட்டமாக கூறிவிட்டார்.
எந்த தொகுதியும் கேட்கவில்லை
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய தயாராக உள்ளேன். எனக்கும் 21 ஆம் தேதி முடியும் வரை வரிசையாக பிரசாரம் உள்ளது. வேட்பாளர் போட்டியில் நான் இல்லை. நான் எந்த தொகுதியும் கேட்கவில்லை. நான் நிற்க வேண்டும் என்றால் எந்த தொகுதியிலும் நிற்கலாம். எல்லா தொகுதிக்கும் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். கோவையில் சிட்டிங் எம்.எல்.ஏ இருக்கிறார் அவர் போட்டியிடுவதுதான் முறை.
மொடக்குறிச்சி தொகுதியில் நிறைய பேர் வேலை பார்த்து இருக்கிறார்கள். தெற்கில் எம்.ஆர் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். நான் எந்த ரேசிலும் இல்லை. எந்த தொகுதியும் கேட்கவில்லை. ஏப். 23 வரை பிரசாரம் செய்வது என்னுடைய வேலை. அதன்பிறகு மற்றதை நான் பேசுகிறேன். எல்லா சண்டையையும் ஒரே நேரத்தில் போட முடியாது. இந்த தேர்தலில் என்னுடைய சண்டை என்பது பிரசாரம் மூலமாகத்தான்” என்றார்.
காலம் இருக்கிறது, காட்சிகள் மாறும்
2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது எனக்கு சிறு வருத்தம் இருந்தது. என்னை நம்பி பல வேட்பாளர்களை போட்டியிட வைத்தோம். ஓபிஎஸ், டிடிவிக்கு பிரசாரம் அதிகம் செய்ய முடியவில்லை. காலம் இருக்கிறது. நான் நிறுத்திய வேட்பாளர்களுக்கு கூட பிரச்சாரம் செய்ய முடியவில்லை. காலம் இருக்கிறது. காட்சிகள் மாறத்தான் போகிறது. நிறைய தேர்தல் வரத்தான் போகிறது. அன்னைக்கு நாம போட்டி போட்டுக்கொள்ளலாம். அன்போடு இருக்க கூடிய மக்கள் அன்போடுதான் இருப்பர்கள். இந்த தேர்தலில் சண்டை என்பது திமுகவின் தவறுகளை எடுத்து சொல்ல வேண்டும். தமிழ்நாடு முழுவதும் போக வேண்டும்” என்று அண்ணாமலை பேசியுள்ளார்.
விரத்தியில் அண்ணாமலை
தற்போது அண்ணாமலை பேசியதுதான் நடத்தி பெற்ற அரசியல் இழந்துள்ளது பாஜகவின் அண்ணாமலை அங்கீகாரம் மரியாதையும கிடைக்கவில்லை என்றும் இதனால் அண்ணாமலை அது தீயில் இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.






