September 21, 2026

பள்ளிக்கு புறப்பட்டுச் சென்ற சிறுமி, பள்ளி வாகனம் மோதி தலை நசுங்கி உயிரிழப்பு…

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, வழாவந்தி கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணன். இவரின் மகன் மேனகா (வயது 8). சிறுமி ஏற்காடு, முண்டகம்பாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். 

சிறுமி மேனகா வாழவந்தி, ஏற்காடு நகர பகுதியில் செயல்படும் பல்வேறு பள்ளியில் படிக்கும் பள்ளி வாகனத்தில் தினமும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இன்று வழக்கம்போல மாணவி வேனில் பள்ளிக்கு புறப்பட்டு இருக்கிறார். 

இந்த வாகனத்தை கீழரைக்காடு, புத்தூர் கிராமத்தில் வசித்து வரும் பெத்தமணி என்பவரின் மகன் ரங்கநாதன் இயக்கி இருக்கிறார். வேனில் வந்த குழந்தைகளை பள்ளிகளில் இறக்கிவிட்டு நிலையில், ஏற்காடு லேடிஸ் சீட் சாலையில் செயல்படும் தனியார் பள்ளியில் மேனகாவை இறக்கிவிட்டுள்ளார்.

பின் சிறுமி இருப்பதை கவனிக்காமல் வேனை இயக்கவே, பின்னோக்கி வந்த வேன் சிறுமியின் மீது மோதியுள்ளது. அலறல் சத்தம் கேட்டு வாகனத்தை நிறுத்தி இறங்கி வந்த ஓட்டுநர், சிறுமி தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடுவதை கண்டு அஞ்சி இருக்கிறார்.

அக்கம்-பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மருத்துவமனையில் சிறுமியின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த மேனகாவின் பெற்றோர், மருத்துவமனைக்கு வந்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.