கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கேன் குடிநீர் விற்பனை அதிகரித்து வருகிறது. தரம் இல்லாத கேன் குடிநீர் விற்றால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என குடிநீர் விற்பனை நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ‘குடிநீர் கேன்களில் நிறுவனத்தின் பெயர், காலாவதி தேதி குறிப்பிட வேண்டும்.
குடிநீர் கேன்களை 30 முறைக்கு மேல் மறுசுழற்சி செய்யக்கூடாது. பலமுறை பயன்படுத்திய பழைய கேன்களில் தண்ணீரை விற்பனை செய்யக்கூடாது. குடிநீர் கேன்களை நேரடியாக வெயிலில் படும்படி வைக்க கூடாது. விதிகளை மீறும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்’ எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேன் குடிநீரின் தரத்தை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காத குடிநீர் ஆலைகள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தரமில்லாத கேன் வாட்டர் விற்பனை செய்யப்பட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கேன் வாட்டரில் குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி. காலாவதியான தேதி, உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம் போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
விநாயகர் சதுர்த்தி எதிரொலி: பக்தர்கள் வருகை குறைந்து வெறிச்சோடிய திருத்தணி முருகன் கோவில்
தமிழக வெற்றிக் கழக அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி கண்டனம்: “அரசியலில் நாகரிகமும் கண்ணியமும் காக்கப்பட வேண்டும்”
லண்டனில் அஜித் பங்கேற்கும் சர்வதேச கார் பந்தயம்: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!