இந்தியாவின் முன்னணி பொறியியல் கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய கட்டமாக, Joint Entrance Examination (JEE Advanced) தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நேற்று (ஏப்ரல் 23) முதல் தொடங்கியுள்ளது. நாட்டின் உயர்நிலை தொழில்நுட்ப கல்விக்கான முக்கிய நுழைவாயிலாக இந்தத் தேர்வு கருதப்படுகிறது.
இந்த தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்ட ஜேஇஇ மேயின் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கே ஜேஇஇ அட்வான்ஸ்டில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டில் மேயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் அடுத்த கட்டத்துக்குத் தயாராகி வருகின்றனர்.
மே 17-ம் தேதி நடைபெறும் இந்த முக்கியத் தேர்வை IIT Roorkee நடத்துகிறது. தேர்வு காலை மற்றும் பிற்பகல் என இரண்டு தாள்களாக நடைபெறும். இரு தாள்களும் கட்டாயமானவை என்பதால், மாணவர்கள் முழுமையான தயாரிப்புடன் பங்கேற்க வேண்டும்.
விண்ணப்ப பதிவு JEE Advanced Official Website வழியாக மேற்கொள்ளப்படுகிறது. தகுதி பெற்றவர்கள் மே 2-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நேர நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே பதிவு செய்ய கல்வி நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள், நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேரும் வாய்ப்பைப் பெறுவர். கலந்தாய்வு முறையின் மூலம் இருக்கைகள் ஒதுக்கப்படும். எனவே, விண்ணப்பம் முதல் தேர்வு வரை ஒவ்வொரு கட்டத்தையும் திட்டமிட்டு அணுகும் மாணவர்கள் முன்னிலை பெறுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More Stories
அதிகாலை 6 மணிக்கு வந்த இமெயில்…46,750 ஊழியர்கள் பணிநீக்கம்…மெட்டா, ஆரக்கிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் அதிரடி!.
சென்னையின் மிக முக்கிய ஏரியாவிற்கு வந்த ₹270 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட திட்டம்…..
தாயை வன்கொடுமை செய்ய வந்த நபரை தடுக்க முயன்ற 10 வயது சிறுவன் படுகொலை!