மதுரை அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில், இன்று காலை வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக 3 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இயந்திரங்கள் மாற்றப்பட்டும் மீண்டும் கோளாறுகள் ஏற்பட்டன. தற்போது கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
More Stories
திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீது இன்று கோர்ட்டில் விசாரணை!
நெல்லை இரட்டைக் கொலை வழக்கு: தொடர்புடைய கடைசி நபரும் கைது – மொத்தமாக 18 பேர் சிக்கினர்!
நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம்: ஊழியர் அதிரடி இடைநீக்கம் -உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் உத்தரவு