நீலகிரி மாவட்டம் 60% வனப்பகுதிகளைக் கொண்ட மாவட்டமாக விளங்குகிறது. இந்த வனப் பகுதிகளில் அரிய வகை உயிரினங்கள், செடி, கொடிகள், தாவர வகைகள், மரங்கள் ஆகியவையும் வளர்ந்து வருகிறது.
தற்பொழுது வறட்சி காலம் நிலவி வருவதால் அடர்ந்த வனப் பகுதிகள் அனைத்தும் பசுமை இழந்து வறண்டு காணப்படுகிறது. அதிகமான வறட்சியின் காரணமாக வனவிலங்குகளும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி பல்வேறு பகுதிகளுக்கும் உலாவும் நிலையும் ஏற்படுகிறது.
மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதி காடுகளில் மழை இல்லாமல் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்துவதால் கடும் வறட்சி நிலவுகிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் ஆச்சக்கரை காட்டுப் பகுதி மற்றும் சிங்காரா செல்லும் சாலையோரக் காடுகளில் திடீர் காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் செடி, கொடி, மரங்கள் எரிந்தன.
மேலும் தீ பரவாமல் இருக்க வனத்துறையினர் மற்றும் கூடலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையக் குழுவினரும் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது.
கோடைகாலங்களில் வறட்சி நிலவும் சூழலில் அடர்ந்த வனப் பகுதிகள் மற்றும் காடுகளுக்கு அருகாமையில் பயணிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டும் எனவும், வனப்பகுதிகளில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More Stories
திருக்கல்யாண விருந்தில்… காய்கறி வெட்டப் பக்தர்களுக்கு அழைப்பு…
நண்பகல் 3 மணி மதுரை மாவட்ட வாக்கு பதிவு நிலவரம்…
மணக்கோலத்தில் வாக்களித்த புதுமண தம்பதிகள்!