ரவி மோகன் நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. ‘கோமாளி’ படம் ரூ.50 கோடியை வசூலித்தது. இந்தப் படத்துக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் பலனாக இந்தப் படம் ரூ.100 கோடி வசூலித்து மாஸ் காட்டியது. இந்தப் படத்துக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியானது ‘டிராகன்’. இந்தப் படமும் ரூ.100 கோடியை வசூலித்தது.
லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘டியூட்’ திரைப்படமும் ரூ.100 கோடியை வசூலித்தது. இதன் மூலம் ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூல் சாதனையை படைத்தார் பிரதீப் ரங்கநாதன். இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்ஐகே’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தப் படம் இந்நிலையில் இந்தப் படம் முதல் வாரத்தில் மட்டும் ரூ.54.3 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

More Stories
பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்
மீண்டும் தமிழ் சினிமாவில் எண்ட்ரி ஆகும் ‘நஸ்ரியா’
தேர்தல் “நையாண்டி மேளா” : நாளை மீண்டும் வெளியாகும் “அமைதிப்படை”