இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்குப் பிறகு, அவரது உதவி இயக்குநர்களில் ஒருவர் தனக்கு சாபம் விட்டு குறுஞ்செய்தி அனுப்பியதாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்திருக்கிறார்.
மறைந்த இயக்குனர் பாக்கியராஜுக்கும், அவரது சிஷ்யனான இயக்குனர் பார்த்திபனுக்கும் இடையே இருந்த ஆழமான அன்பும் மரியாதையும் அனைவரும் அறிந்ததே. பாக்கியராஜின் மறைவுச் செய்தியைக் கேட்டு, அவரது உடலைத் தன் தோளில் சுமந்து சென்று, மின் மயானத்தில் அவரது அஸ்தியை பெரும் வரை உடனிருந்து குடும்பத்தாருக்கு உறுதுணையாக இருந்தவர் பார்த்திபன். பாக்யராஜ் மறைந்த செய்தியைக் கேட்டதும் முதல் ஆளாக ஓடிவந்த அவர் குருவின் இழப்பில் மொத்தமாக உடைந்து போயிருந்தார். மேலும், அவரது இறுதி ஊர்வலத்தின் போது, பாக்கியராஜ் கையெழுத்திட்ட அட்டையை உருவகப்படுத்தி, அவர் உடல் மீது வைத்திருந்தது பலரையும் உருக்கியது.
இந்நிலையில் பாக்யராஜின் இறுதி அஞ்சலிக்கு வந்திருந்த இயக்குநர் ஒருவர் , பார்த்திபனிடம் கடுமையான வார்தைகளை பயன்படுத்தி சாபம் விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பார்த்திபன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, “ பாக்கியராஜின் அஸ்தியெல்லாம் கரைத்துவிட்டு வீட்டிற்கு வந்தோம். அப்போது பாக்யராஜின் உதவி இயக்குநர்களில் ஒருவர், என்னைப்போலவே அவருக்கும் அவர் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். யாரென்று பெயர் சொல்ல விரும்பவில்லை. அந்த நபர் எனக்கு அன்றைய இரவு ஒரு மெசேஜ் அனுப்புகிறார்.
அதில், என்னவோ நீ தான் பாக்கியராஜைப் பெற்று வளர்த்து, நீயே அவரைக்கொண்டுபோய் புதைத்துவிட்டு வந்தது மாதிரி நடந்து கொள்கிறாய். எல்லா வேலையும் நீயே செய்கிறாய்? உன்னைச் சுற்றி இருப்பவர்களையும் அனுசரித்துப் போக வேண்டும். உடன் இருப்பவர்களையும் கூப்பிட்டு ஏதாவது வேலை சொல்லனும்ல? இப்படி அனுசரிக்காததால் தான் நீ பொண்டாட்டி பிள்ளைகள் இல்லாமல் கஷ்டப்படுகிறாய். கூடிய சீக்கிரம் பாரு… நீ செத்துப்போய்விடுவ, ஆனாஉனக்குக் கூட்டமே வராது” என சாபமிடும் வகையில் அந்தநபர் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அந்த நபரின் குறுஞ்செய்திக்கு எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை என்றும் அவர் கவலையுடன் பகிர்ந்து கொண்டார்.
மேலும், “ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால், அவருடன் பேசவேண்டாம், அவர் என்ன செய்தாலும் அதைக் கண்டு கொள்ள வேண்டாம். அதை விட்டுவிட்டு ஏன் இப்படிச் சாபமிட வேண்டும்? இதில் என்ன அற்ப சந்தோஷம் கிடைக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தக் கொடூரமான செயலையும், சாபமிட்ட அந்த நபரின் செயலுக்கும் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பார்த்திபனுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில், “பார்த்திபன் சார், நீங்கள் கவலைப்படாதீர்கள். இதுபோன்ற சாபமெல்லாம் எப்போதும் பலிக்காது.. உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்” எனத் தங்கள் ஆதரவை அன்புடன் வெளிப்படுத்தி வருகின்றனர்.

More Stories
ரேஷன் கடைகளில் கிலோ ரூ.15-க்கு கோதுமை மாவு: தமிழக அரசு அதிரடி முடிவு!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்: 4 முதல்வர்களுடன் திரையுலகில் பயணித்த கலை ஆளுமையின் வாழ்க்கைப் பயணம்
“அமைச்சர் பதவிக்காக தவெகவுக்கு சென்றோருக்கு விஜய் கொடுத்தது அல்வா” – பழனிசாமி…