தமிழகத்தில் பாஜகவுக்கு நோ என்ட்ரி! – முதல்வர் ஸ்டாலின் அதிரடி

திருவள்ளூரில் நடைபெறற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆவடி, திருவள்ளூர், பூவிருந்தவல்லி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் திருத்தணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார்.

நோ என்ட்ரி..!

அப்போது அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டின் வடக்கு வாசலான திருவள்ளூருக்கு வந்துள்ளேன். தமிழ்நாட்டுக்கு ஆபத்து எப்போதும் வடக்கில் இருந்துதான் வரும். வடக்கில் இருந்து வரும் என்டிஏ என்ற ஆபத்தை தடுத்து நிறுத்தும் தேர்தல் இது. எடப்பாடி பழனிசாமி இருக்கும் தைரியத்தில்தான் பாஜக ஆட்சி அமைக்க நினைக்கிறது. இந்த தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்கு, என்டிஏக்கு நோ என்ட்ரியாக இருக்க வேண்டும்.” என்றார்

அதிமுக = பாஜக

பாஜகவின் கிளைக்கழகம் தான் அதிமுக. அதிமுக ஆட்சிக்கு வந்தால் மும்மொழிக்கொள்கையை கொண்டு வருவோம் என பாஜகவினர் கூறி வருகின்றனர். வாய் மூடி இருக்க நாங்கள் அடிமை சாமி கிடையாது. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்கிற சவாலில் வெற்றி பெற வேண்டும்.

கூவத்தூரில் தவழ்ந்து, ஊழலில் திளைத்து, உரிமைகளை தொலைத்து, தமிழ்நாட்டை நாசப்படுத்திய பழனிசாமி ஆட்சியில் வளர்ச்சி நின்று போனது. பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி வெறும் 0.07 சதவீதம் மட்டுமே. ஆனால் இன்றைக்கு 11.19 சதவீதம் வளர்ச்சி. தமிழ்நாடு முழுக்க பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறோம். இந்தியாவுக்கே ரோல் மாடலாக தமிழ்நாடு உள்ளது என்று முதல்வர் கூறினார்.

ஆளுநர் – ஆர்.எஸ்.எஸ்

தமிழ்நாடு என்பது பலர் கண்ணை உறுத்துகிறது. தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என்பது ஆர்.என்.ரவியின் குரல் அல்ல. அது ஆர்.எஸ்.எஸ். குரல். நான் உயிரோடு இருக்கும் வரை, திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட்டுப் பார்க்கும் தைரியம் உண்டா? தைரியம் இருந்தால் தட்சிணப் பிரதேசம் என மாற்ற முடியுமா? சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை தான் சூப்பர் ஸ்டார்” என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

Related Posts

சிவகாசி களம்: ராஜேந்திர பாலாஜிக்கு மக்கள் ஆதரவா? அதிருப்தியா? – ஓர் அலசல்!

சிவகாசி: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், தமிழகமே உற்றுநோக்கும் தொகுதிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது ‘குட்டி ஜப்பான்’ என்று அழைக்கப்படும் சிவகாசி. இங்கு அதிமுக சார்பில் களம் இறங்கியுள்ள முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, மீண்டும் தனது கோட்டையைத் தக்கவைக்க தீவிரமாகப் போராடி வருகிறார்.

மக்கள் மத்தியில் நிலவும் நேர்மறை பிம்பம்

​சிவகாசி தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த ராஜேந்திர பாலாஜி மீது தொகுதி மக்களிடையே ஒருவித ‘நெருக்கம்’ இருப்பதை மறுக்க முடியாது.

  • வளர்ச்சித் திட்டங்கள்: தனது அமைச்சராக இருந்த காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையங்கள், ஆர்.டி.ஓ அலுவலகம் மற்றும் மருத்துவமனையில் தீக்காயப் பிரிவு போன்றவற்றை மக்கள் இப்போதும் நினைவுகூர்கின்றனர்.
  • தன்னெழுச்சியான அணுகுமுறை: பிரச்சாரத்தின் போது ஆம்புலன்ஸிற்கு வழிவிடுவது, கட்சிப் பாகுபாடின்றி மக்களிடம் பேசுவது போன்ற செயல்பாடுகள் அவர் ஒரு “மக்களுக்கான தலைவர்” என்ற பிம்பத்தை இன்னும் தக்கவைத்துள்ளன.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களும், அவர் மீதான அவதூறுகளும்

​தேர்தல் களம் என்று வந்துவிட்டால் குற்றச்சாட்டுகளுக்குப் பஞ்சம் இருக்காது. ராஜேந்திர பாலாஜி மீது வைக்கப்படும் பிரதான விமர்சனங்கள்:

  1. ஊழல் வழக்குகள்: ஆவின் வேலைவாய்ப்பு மோசடி மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையின் (DVAC) பிடியில் அவர் சிக்கியது, எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய ஆயுதமாக உள்ளது. “73% வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தார்” என்ற லஞ்ச ஒழிப்புத் துறையின் அறிக்கை அவர் மீது ஒரு கறையை ஏற்படுத்தியுள்ளது.
  2. பேச்சுக்கள்: மேடைகளில் அவர் பேசும் அதிரடியான, சில சமயம் சர்ச்சையான கருத்துக்கள் அவர் மீதான விமர்சனங்களை அதிகரிக்கச் செய்கின்றன. அண்மையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயைப் பற்றி அவர் கூறிய விமர்சனங்கள் இளைஞர்களிடையே கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளன.
  3. தலைமறைவு சர்ச்சை: கடந்த காலங்களில் கைது நடவடிக்கைக்கு பயந்து கர்நாடகாவில் தலைமறைவாக இருந்ததை, “சட்டத்திற்குப் பயந்தவர்” என்ற ரீதியில் எதிர்க்கட்சிகள் மக்களிடம் கொண்டு செல்கின்றன.

சிவகாசி மக்களின் தற்போதைய மனநிலை

​தொகுதி மக்களிடையே விசாரித்தபோது, “அவர் செய்த பணிகள் ஒரு பக்கம் இருந்தாலும், அவர் மீதான வழக்குகள் மனநிறைவைத் தருவதில்லை” என்கிறார்கள் ஒரு தரப்பினர். அதே சமயம், “பட்டாசுத் தொழிலுக்குப் பாதிப்பு வரும்போதெல்லாம் குரல் கொடுப்பதில் அவர் முன்னிற்கிறார்” என்பது தொழிலாளர்களின் கருத்தாக உள்ளது.

​தற்போது காங்கிரஸ் வேட்பாளர் அசோகனுக்கும், ராஜேந்திர பாலாஜிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார்கள் என்பதால், ராஜேந்திர பாலாஜிக்கு இது ஒரு அக்னிப் பரீட்சையாகவே கருதப்படுகிறது.

அவதூறுகள் ஒருபுறம், அமைச்சராக இருந்தபோது செய்த பணிகள் மறுபுறம் என இரண்டிற்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருக்கிறது சிவகாசி மக்களின் வாக்கு. ராஜேந்திர பாலாஜியின் அதிரடி அரசியல் அவருக்கு மீண்டும் வெற்றியைத் தேடித்தருமா அல்லது வழக்குகள் முட்டுக்கட்டையாக இருக்குமா என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.

Continue reading
விஜய்யையும்; எடப்பாடி பழனிசாமியையும் ஒரே மேடையில் பேச்சால் விளாசிய திருமாவளவன்…!

“செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “இங்கு ஒரு நடிகர் இருக்கிறார். கட்சி தொடங்கியதும் சந்திக்கும் முதல் தேர்தலிலேயே முதல்வராக வேண்டும் என ஆசைப்படுகிறார். பல ஆயிரம் கோடிகளை விட்டுவிட்டு மக்கள் பணி செய்ய வந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் பதவிக்காக மட்டுமே வந்திருக்கிறார்”. என்று குற்றம்சாட்டினார்.

“விடுதலை சிறுத்தைகள் கட்சி நினைத்திருந்தால் எத்தனையோ கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி அமைத்திருக்க முடியும். ஆனால் நாங்கள் ஏன் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருக்கிறோம்? அதுதான் கொள்கை பிடிப்பு. அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் அதிக சீட்டு கிடைப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் தவிர்த்து, கொள்கை பிடிப்புக்காக நின்ற கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி” என்று திருமாவளவன் குறிப்பிட்டார்.

“தப்பித்தவறி ஒரு வேளை எடப்பாடி பழனிசாமி முதல்வரானால், அவரின் பதவி இரண்டு மாதங்களுக்குள் பறிக்கப்படும். அதற்கு பதிலாக எச். ராஜாவையோ அல்லது அண்ணாமலையையோ அல்லது பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரனையோ முதல்வராக பா.ஜ.க. தேர்வு செய்யும். அந்த நிலைக்கு பா.ஜ.க. செல்லும், என்றும் திருமாவளவன்
கருத்து தெரிவித்தார்.

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *