பிரதமர் மோடி பங்கேற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் பேனரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பிரம்மாண்ட மாநாடு இன்று மாலை நடைபெற்று கொண்டியிருக்கிறது. இந்த மாநாட்டில், பிரதமர் மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இருப்பினும், விழா திடலில் வைக்கப்பட்டுள்ள பிரதான கூட்டணி தலைவர்களின் பதாகைகளில் எடப்பாடி பழனிசாமி-யின் புகைப்படம் இடம்பெறாதது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமியை தவிர, நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், டிடிவி தினகரன் பிற கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரது படமும் இடம்பெற்றுள்ளன.