தூத்துக்குடி அருகே 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உடலை கூறு கூறாக வெட்டிப் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுப்புராஜ். இவரது 17 வயது மகள் அரசு மேல் நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 12-ம் வகுப்பு பொது தேர்வை அவர் எழுதி வந்தார்.

காட்டுப் பகுதிக்குள் காணாமல் போன மாணவி

இந்நிலையில் மாலை 6 மணிக்கு அவர் வீட்டின் அருகே உள்ள காட்டு பகுதிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. ஒரு மணி நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது தந்தை சுப்புராஜ் மற்றும் உறவினர்கள் காட்டுப் பகுதிக்கு சென்று தேடி, பின்னர் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அத்துடன், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

போலீசாரிடம் புகார்

“இதையடுத்து சுப்புராஜ் உள்ளிட்டோர் இன்று காலை விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். அங்கும் புகார் பெறப்படாததால், மீண்டும் குளத்தூர் காவல் நிலையம் வந்து, புகார் அளித்தனர்.

சடலமாக மீட்பு

இதற்கிடையே,  காட்டுப் பகுதியில்  கொடூரமாக கொலை செய்யப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பள்ளி மாணவியை போலீசார் சடலமாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து ஆத்திரமடைந்த சுப்புராஜ் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் குறுக்குச்சாலை – ராமேஸ்வரம் சாலையில் வேடநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.