திமுகவில் பிற கட்சியினர் இணையும் விழாவை ஓ. பன்னீர்செல்வம் தனது சொந்த மாவட்டமான தேனியில் நடத்தாமல் மதுரையில் திட்டமிட்டிருப்பது அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ் அவர்களும், அவரது மகனும் தங்கள் ஆதரவாளர்களை திமுக-வில் இணைக்கும் விழா மதுரையில் நடத்தினர்.
திமுக-வில் இணையும் விழா
தேனியில் செல்வாக்கு சரிந்துள்ளதாலும், அவரது முக்கிய ஆதரவாளர்கள் பலரும் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகி வருவதாலும், அங்கு பெரிய அளவிலான கூட்டத்தைக் கூட்டுவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தே ஓபிஎஸ் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

அமைச்சர்கள் உதவியுடனா?
மதுரையில் விழா நடத்தினால், அங்குள்ள திமுக அமைச்சர்களான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் மூர்த்தி ஆகியோரின் உதவியுடன் கூட்டத்தை எளிதாகத் திரட்டிவிடலாம் என்று அவர் கணக்குப் போடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தனது பலவீனத்தை மறைக்க, திமுகவின் கட்டமைப்பைப் பயன்படுத்தி கூட்டத்தைக் கூட்டி, தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ள ஓபிஎஸ் மேற்கொள்ளும் இந்த முயற்சி, அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரது அரசியல் நகர்வுகளையும் விமர்சனத்திற்குள்ளாக்கியுள்ளது.






