சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டிற்குள் தன்னை அனுமதிக்க விஜய் மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவரது மனைவி சங்கீதா, விவாகரத்து வழக்கு முடியும் வரை அங்கு தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் ஏப்ரல் 10 அன்று விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
விவாகரத்து மனுவில், விஜய் மீது சங்கீதா திருமணம் மீறிய உறவு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
த்ரிஷா Vs சங்கீதா
சமூக வலைத்தளங்களில் பலரும் இதுகுறித்து விவாதித்து வருகின்றனர். குறிப்பாக தவெக தொண்டர்கள், சங்கீதாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதுகுறித்து விஜய் இன்னும் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளார். சமீபத்தில் சென்னையில் திருமண விழா ஒன்றில் விஜய்யுடன் நடிகை த்ரிஷா ஒன்றாக பங்கேற்றது வைரலானது.
புதிய மனு தாக்கல்
இந்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
விவாகரத்து கோரியுள்ளதால் விஜய் வீட்டில் தங்க அனுமதி வழங்கப்படவில்லை என்று மனுவில் குற்றம்சாட்டியுள்ள அவர், இந்த வழக்கில் விவாகரத்து பெறும் வரை விஜய்யின் நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். தான் லண்டனைச் சேர்ந்தவர் என்பதால் வேறு எங்கும் தங்க அனுமதியில்லை என்றும் தன் வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்






