September 10, 2026

உச்சம் தொடும் தங்கம் விலை…ஒரு சவரன் 95,840 ரூபாய்

சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் விலை 95,840 ரூபாயாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் தங்கம் விலை கடந்த 26-ம் தேதி வரை உயர்ந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் சற்று குறைந்து காணப்பட்டது.அதன்படி ஆபரண தங்கம், கிராம் 11,770 ரூபாய்க்கும், சவரன், 94,160 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (நவம்பர் 28) தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் உயர்ந்து, 11,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, 94,720 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்த நிலையில், இன்று (நவம்பர் 29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 95,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு 140 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 11,980 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை 95 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

You may have missed