September 10, 2026

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை…வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு 110 ரூபாய் வரை குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த நவம்பர் 18-ம் தேதி குறைந்து, 19-ம் தேதி உயர்ந்த நிலையில், 20-ம் தேதி விலை சரிந்தது. இதன் தொடர்ச்சியாக நவம்பர்  21-ம் தேதி கிராமுக்கு .40 ரூபாயும், சவரனுக்கு 320 ரூபாயும் குறைந்து, ஒரு கிராம் 11 ஆயிரத்து 460 ரூபாய்க்கும், ஒரு சவரன் 91 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை 92 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் வந்தது.

இதனைத் தொடர்ந்து நவம்பர் 22-ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 170 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,630 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 93,040 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்றும் ஒரு கிராம் தங்கம் 11,630 ரூபாய்க்கும் ஒரு சவரன் 93,040 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து 92,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து 11,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 171 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

You may have missed