தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள ‘வெற்றிப் பயணம்’ திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண்களுக்கும், திருநங்கைகளுக்கும் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தை வழங்கும் இந்தத் திட்டத்தின் விரிவாக்கத்தால், ஆண்களுக்கும் எதிர்பாராத விதமாகப் பேருந்து கட்டணம் குறைந்துள்ளது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய வழித்தட மாற்றங்கள் மற்றும் பேருந்து வகைப்பாடு திருத்தங்களால், பல பகுதிகளில் இயக்கப்படும் அரசுப் புறநகர் மற்றும் நகரப் பேருந்துகள் சாதாரண பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக, வழக்கமாக வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தை விடக் குறைவான தொகையே பயணிகளிடம் பெறப்படுகிறது
உதாரணமாக, சில முக்கிய வழித்தடங்களில் முன்பு ரூ. 32 வரை வசூலிக்கப்பட்ட கட்டணம், தற்போது மாற்றியமைக்கப்பட்டு ரூ. 24 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதேபோன்று பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் வழித்தடங்களிலும் ஆண்களுக்கான டிக்கெட் கட்டணம் கணிசமாகக் குறைந்துள்ளதால், தினசரி பயணம் செய்யும் ஆண் பயணிகளும் இத்திட்டத்தால் மறைமுகமாகப் பயனடைந்துள்ளனர்.
பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணம் வழங்கப்படுவதோடு, ஆண்களுக்கும் கட்டணம் குறைந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்தக் கட்டணக் குறைப்பு தொடர்ந்து நீடிக்குமா என்பது குறித்துப் பயணிகள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

More Stories
மதுரையில் எம்.எல்.ஏ வருகைக்காக 2½ மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள்! போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி!
தவெகவுக்கு முழு ஆதரவு! பிராமணர் சங்கம் அதிரடி அறிவிப்பு – தமிழக அரசியலில் பரபரப்பு!
டாஸ்மாக் கடைகளில் பணம் செலுத்த புதிய கட்டுப்பாடு! நவம்பர் 1 முதல் அதிரடி மாற்றம்!