ராமநாதபுரம் டவுன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எம்.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து முருகன். இவரது மூத்த மகள் கார்த்திகை செல்வி (வயது 28), இளைய மகன் அஜித்குமார். மூத்த மகளான கார்த்திகை செல்விக்கும், மதுரை பைகாரா பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான பாலகணேஷ் என்பவருக்கும் திருமணமாகி, அந்த தம்பதியருக்கு சாய் தீப்தி மற்றும் சாரு நித்திகா என 5 வயதில் இரட்டைப் பெண் குழந்தைகள் இருந்தனர். முத்து முருகனின் இரண்டாவது மகனான அஜித்குமார், சபரிகா (வயது 22) என்ற இளம் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு, ராமநாதபுரத்தில் தனது பெற்றோர் வீட்டிலேயே கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையிலிருந்து கார்த்திகை செல்வி தனது குழந்தைகளுடன் ராமநாதபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். கடந்த சனிக்கிழமை இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, சிறுமி சாய் தீப்தி மட்டும் திடீரென மாயமானாள். பதறிப்போன குடும்பத்தினர் அவளைத் தேடியபோது, அருகில் உள்ள பால்பாண்டி என்பவரது வீட்டின் உறை கிணற்றில் அந்தச் சிறுமி பிணமாக மிதப்பது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த ராமநாதபுரம் டவுன் போலீசார், சிறுமியின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். யாரேனும் சிறுமியைத் தூக்கி கிணற்றுக்குள் வீசினார்களா என்ற கோணத்தில் போலீசார் சோதனையிட்டபோது, முத்து முருகனின் வீட்டின் பின் கதவு சரியாகப் பூட்டப்படாமல் அரைகுறையாக மூடியிருந்ததைக் கவனித்தனர். “வழக்கமாகப் பின் கதவை நன்றாகப் பூட்டிவிடுவோம்” என வீட்டிலிருந்தவர்கள் உறுதியாகத் தெரிவித்ததால், போலீசாருக்குச் சந்தேகம் வலுத்தது.
இதனையடுத்து, அஜித்குமாரின் மனைவியான சபரிகாவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார். இதனால் அவரிடம் போலீசார் தீவிரமாகத் துருவித் துருவி விசாரணை நடத்தியதில், அவரே இக்கொடூரப் படுகொலையைச் செய்ததை ஒப்புக்கொண்டார்.
காதல் திருமணம் செய்து கொண்ட சபரிகாவிற்கும், அவரது மாமியார் பூமாதேவி மற்றும் நாத்தனார் கார்த்திகை செல்விக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. வசதியான இடத்தில் அஜித்குமாருக்குப் பெண் பார்க்க நினைத்ததால், அவர்கள் இருவருக்கும் இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை எனச் சபரிகா கூறியுள்ளார். மேலும், சபரிகா – அஜித்குமார் தம்பதியருக்குப் பிறந்த 11 மாதப் பெண் குழந்தை மாற்றுத்திறனாளியாக இருந்ததால், மாமியாரும் நாத்தனாரும் அந்தக் குழந்தை மீது கடுமையான வெறுப்பைக் காட்டியுள்ளனர். கார்த்திகை செல்வி பெற்றோர் வீட்டிற்கு வரும்போதெல்லாம் வீட்டில் சண்டைகள் அதிகரித்துள்ளன.

இதற்கிடையே, கார்த்திகை செல்வியின் இரட்டைப் பெண் குழந்தைகளுக்குக் காதணி விழா நடத்துவதற்காக, சபரிகாவின் நகைகளை மாமியார் சீராகத் தருமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட கடுமையான ஆத்திரத்தாலும், தன் குழந்தை புறக்கணிக்கப்பட்டதால் வந்த பொறாமையாலும், கார்த்திகை செல்வியின் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்யச் சபரிகா திட்டமிட்டுள்ளார்.
சம்பவ தினத்தன்று நள்ளிரவில் அனைவரும் தூங்கிய பிறகு, சிறுமி சாய் தீப்தியை மட்டும் தூக்கிக்கொண்டு ரயில்வே தண்டவாளம் நோக்கிச் சபரிகா நடந்துள்ளார். வழியில் கண்விழித்த குழந்தை, “அத்தை நாம் எங்கே போகிறோம்?” என்று மழலை மொழியில் கேட்டுள்ளது. அதற்குச் சபரிகா, “ஒன்றுமில்லை செல்லம், நீ தூங்கு” எனத் தட்டிக் கொடுத்துள்ளார். தன் அத்தையை முழுமையாக நம்பிய அந்தப் பச்சிளம் குழந்தை, அவளது தோளிலேயே மீண்டும் அயர்ந்து தூங்கியுள்ளது.
அந்தச் சமயத்தில் அப்பகுதியில் நாய்கள் அதிகமாகக் குரைத்ததால் பயந்துபோன சபரிகா, தண்டவாளத்திற்குச் செல்லாமல் மீண்டும் வீட்டிற்கே திரும்பியுள்ளார். ஆனால் குழந்தையை அப்படியே வீட்டிற்குள் கொண்டு சென்றால் விடிந்ததும் தன் மீது சந்தேகம் வரும் என்பதால், பக்கத்து வீட்டு உறை கிணற்றுக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கி வீசியுள்ளார். கிணற்றுத் தண்ணீரில் அந்த ஐந்து வயது குழந்தை உயிருக்குப் போராடியதைக் கண்டும் காணாமல், நெஞ்சில் ஈரமில்லாமல் வீட்டிற்குள் வந்து படுத்துக் கொண்டார்.
பின்வாசல் வழியாக அவசர அவசரமாக உள்ளே வந்த பதற்றத்தில், கதவைச் சரியாகப் பூட்டாமல் அப்படியே சாத்திவிட்டு வந்துள்ளார் சபரிகா. இந்த ஒரு சிறிய தவறே போலீசாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தி, அவரைத் துல்லியமாகக் காட்டிக் கொடுத்துள்ளது.
ஐந்து வயதுக் குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த அத்தை சபரிகாவை அதிரடியாகக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். இந்தச் நெஞ்சை உலுக்கும் சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

More Stories
பவுடர்’ வீடியோ: “கொன்றுவிடுவோம் என மிரட்டுகிறார்கள்” – பள்ளி நண்பர் பரபர புகார்…
மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்; ‘லிவ்-இன்’ காதலனை கழுத்தை நெரித்து கொன்ற சகோதரிகள்:
ரூ.504 கோடி மோசடி வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி கைது: