சென்னை: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசின் தலைமைச் செயலர் சாய்குமார் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு அறிவிப்பில், கே. வெங்கட நாராயணா இந்தப் பொறுப்பை ஏற்கும் தேதியில் இருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த நியமனம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள மத்திய அரசிடம் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்துவதற்கும், மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கும் இந்த சிறப்பு பிரதிநிதி பதவி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தற்போது இந்தப் புதிய பொறுப்பில் திரைப்படத் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
போதைப்பொருள் ஒழிக்க போராடி ஓடின CM.. அதே நேரத்தில் லீக்கான தவெக அமைச்சரின் வீடியோ!
சாதி சான்றிதழ் இணைந்த அடையாள அட்டை : தங்கம் தென்னரசு கண்டனம்!
போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் | மக்களுடன் ஓடிய முதல்வர் விஜய்!