போதை இல்லா தமிழகம் நோக்கி ஓட்டம்… இளைஞர்களுக்கு அழைப்பு…

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விழுப்புரம் மாவட்ட பிரிவு ஸ்டார்ட் RUN ஸ்டாப் DRUGS எனும் போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டம் 2026 நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தகவல்.

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் செய்தியை வலியுறுத்தவும், விழுப்புரம் மாவட்டத்தில் ஸ்டார்ட் RUN ஸ்டாப் DRUGS எனும் போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டம் 2026-ஐ நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியை 26.06.2026 அன்று காலை 6.30 மணிக்கு MGR உள் விளையாட்டு அரங்கத்தில் துவங்கி மாவட்ட ஆட்சியர் வளாகம் நுழைவுவாயில், சிக்னல், மாம்பழப்பட்டு – திருகோவிலூர் சாலை, ES பள்ளி வழியாக மாவட்ட ஆட்சியர் நுழைவுவாயில் பின்புறம் சென்று மாவட்ட ஆட்சியர் வளாக DPO மைதானத்தில் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பங்கேற்கும் 500 நபர்களுக்கு பிரத்யேக டி-ஷர்ட் (T-shirt) வழங்கப்படும்.

போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் செய்தியை வலியுறுத்தவும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், அரசு அதிகாரிகள், NCC, NSS, சாரணர்கள் மற்றும் சாரணியர்கள் (Scouts and Guides) மற்றும் பொதுமக்கள் ஆகியோர் போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டம் 2026-ல் பங்கேற்க வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.