திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பாப்பாத்தி அம்மன் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பொருத்தப்பட்டுள்ள மணிகள் தொடர்ந்து திருடப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை மொபட்டில் வந்த மர்ம நபர் வாகனத்தை நிறுத்தி கோயில் மணியை கட்டிங் பிளேடு, சுத்தியலால் தட்டிக் கொண்டு சென்றுள்ளார்.
உடனே கோயில் பூசாரி அவரை பிடித்து, குரிசிலாப்பட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணை யில் அவர் ஆண்டியப்பனூர் ஊராட்சி கிளை தவெக நிர்வாகியான ஏ.எஸ்.குமார்(48) என்பது தெரியவந்தது. மாலை நேரங்களில் கோயிலுக்கு வந்து மணி மற்றும் பித்தளை பொருட்களை திருடிச்சென்று விற்றதும் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் ஏ.எஸ்.குமாரை கைது செய்தனர். இதுகுறித்து எஸ்பி தனிப்படை போலீசார் கூறுகையில், ‘ஏ.எஸ்.குமார் போதையில் இதேபோல் 3 மணிகளை திருடியது தெரியவந்தது. கேள்விகளுக்கு அலட்சியமாக பதில் அளித்தார்’ என்றனர்
தமிழகத்தில் தவெக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், பல்வேறு குற்றச் சம்பவங்களில் தவெக நிர்வாகிகள் தொடர்ந்து கைதாகி வருகின்றனர். கொள்ளை,பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களில் தவெக நிர்வாகிகள் தொடர்ந்து கைதாகி வருகின்றனர்.

More Stories
பொதுமக்கள் மீது வெடிகுண்டு வீச்சு: தஞ்சை, பந்தலூரில் பரபரப்பு — 7 பேர் கைது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
விநாயகர் சதுர்த்தி எதிரொலி: பக்தர்கள் வருகை குறைந்து வெறிச்சோடிய திருத்தணி முருகன் கோவில்