September 10, 2026

சென்னையில் மேற்கூரை சரிந்து வடமாநில தொழிலாளர் உயிரிழப்பு…

ஐபிஎல் இறுதிப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த போது, இரும்பு மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் வட மாநிலத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்; மற்றொரு தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கோர விபத்தில் 35 பேர் படுகாயமடைந்த நிலையில், இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ராமாபுரத்தை அடுத்த சாந்தி நகர் பிரதான சாலையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்காக 8 இரும்பு ஷெட்டுகள் போடப்பட்டு தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு (மே 31) 35 வட மாநில தொழிலாளர்கள் ஒன்றாக அமர்ந்து ஐபிஎல் இறுதிப் போட்டியை பார்த்து வந்துள்ளனர்.

அப்போது திடீரென இரும்பு மேற்கூரை அவர்கள் மீது சரிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் 35 தொழிலாளர்களும் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த மவுண்ட் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

You may have missed