கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன், மனைவி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். வேப்பேரி காவல் நிலைய போலீஸார் புரசைவாக்கம் நெடுஞ்சாலையிலுள்ள ஒரு நகைக்கடை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அங்கு சந்தேகப்படும்படி பைக்கில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். அதனால், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள், போதைப் பொருளாக பயன்படுத்த வைத்திருந்த உடல்வலி மாத்திரைகளை வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, போதைப்பொருட்கள் வைத்திருந்த சென்னை மூலக்கொத்தளம் ராமதாஸ் நகரைச் சேர்ந்த ஜோசப் (20), கொருக்குப்பேட்டை ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த மகேந்திரன் பூபதி மாரி (22) ஆகிய இருவரை கைது செய்தனர்.
இவர்களுக்கு போதைப்பொருட்களை கொடுத்து விற்பனை செய்ய சொன்ன புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஷாலினி (26), இவரது கணவர் கவுதம் (27), பெரம்பூர் ஜானகிராமன் நகரைச் சேர்ந்த அப்பாஸ் மொய்தீன் (21) ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். வடமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அனைவரையும் கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!