மங்களூரு நகரில் உள்ள வசதி படைத்தவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிக விலைக்கு உயர்ரக கஞ்சாவை விற்று லாபம் சம்பாதிக்க கல்லூரி மாணவி சுஹானா திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
கோலமாவு கோகிலா’ படத்தில் வரும் நயன்தாராவை போல சென்னையிலிருந்து மங்களூருக்கு 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கஞ்சாவை கடத்திய கல்லூரி மாணவி போலீசில் பிடிபட்டுள்ளார்.
அதில் அவரிடம் ரூ.35 லட் சம் மதிப்பிலான 1 கிலோ 42 கிராம் எடை கொண்ட உயர்ரக ‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’ இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. இதையடுத்து கஞ்சா மற்றும் இளம் பெண்ணின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர். விசாரணையில், அவர் சிவமொக்கா மாவட்டம் ஹூலிதேவரா பானா பகுதியை சேர்ந்த சுஹானா (வயது 21) என்பதும், குந் தாப்புராவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. இறுதியாண்டு படித்து வரும் மாணவி என்பதும் தெரியவந்தது.
சென்னையில் இருந்து கடத்தல்:
கைது செய்யப்பட்ட சுஹானா, இந்த போதைப்பொருளை சென்னையில் இருந்து வாங்கி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் ஒப்புக்கொண்டார். மங்களூரு நகரில் உள்ள வசதி படைத்தவர்களுக்கும், இளைஞர்களுக் கும் அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்க அவர் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மாணவி சுஹானா ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், கவூர் போலீஸ் நிலையத்தில் ஒரு போதைப்பொருள் வழக்கும், பெங்களூரு சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையினரால் ஒரு கடத்தல் வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாருக்கு தெரியவந்தது.
முன்பெல்லாம் இளைஞர்களிடம் மதுப்பழக்கம் , சிகரெட் புகைப்பது உள்ளிட்ட கெட்ட பழக்க வழக்கங்கள் இருந்தன. ஆனால் தற்போது இளைஞர்களிடையே போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.

More Stories
கேரள முதலமைச்சர் இன்று அறிவிக்கப்படுவார்: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தகவல்
“தங்கம் சவரனுக்கு ரூ.2 லட்சத்தை தொடும்?”.. பேரதிர்ச்சி தகவல்…
ரூ.100 கோடி மோசடி செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது…