புது டெல்லியில் பாரம்பரியம் சிலம்பம் விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய மாபெரும் தேசிய அளவிலான சிலம்பப்போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, மும்பை, உத்திரபிரதேஷ் ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் பங்கு பெற்றனர்.
இப்போட்டியில் மதுரை மாவட்டம் கோச்சடை கிராமத்தை சேர்ந்த ஆசான் தெய்வ திரு கோ. க. முத்து வெங்கடாச்சலம் அவர்களின் ஸ்ரீ மதுரை மீனாட்ஷி லிங்கம் இலவச சிலம்பள்ளியில் இருந்து ஆசான் மா. க. லெட்சுமணன் ஐயா அவர்கள் மற்றும் க. முத்துச்செல்வி கண்ணன் தலமையில் இருந்தும் சிலம்பம் வீரர்கள் பங்கு பெற்றனர்.
இதில் இரட்டை கம்பு 21வயது பிரிவில் M.ஆர்த்தி மீனா முதல் இடத்தை பெற்று தங்கபதக்கம் வென்றார். இரட்டைகம்பு 17வயது பிரிவில் K.கோகுலஸ்ரீ இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். இதில் ஒற்றை கம்பு 16வயது பிரிவில் K.தர்ஷன் மூன்றாம் இடம் பெற்று வெங்கல பதக்கம் வென்றார். சிறப்பாக விளையாடி பரிசு பெற்று இன்று புதுடில்லியில் இருந்து திரும்பிய இவர்களை மதுரை கோச்சடை கிராமத்தை சேர்ந்த பொது மக்களும் பெற்றோர்களும் வெகுவாக பாராட்டி வரவேற்றனர்.

More Stories
மாதம் ரூ.2000 வருமா? விஜய் பதிலே சொல்லலையே..
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு விஜய் கையெழுத்திட்ட அரசாணை கோப்புகள்…
தவறை அனுமதிக்கமாட்டேன்னு பகிரங்கமாக சொன்ன விஜய்! நல்ல அறிகுறினு பாராட்டிய சகாயம் ஐஏஎஸ்!