May 9, 2026

பெண் காவலரை காதலித்து ஏமாற்றிய காவலர் கைது…

திண்டுக்கல் அருகே பெண் காவலரை காதலித்து ஏமாற்றிய காவலர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் அருகே தோட்டனூத்து புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பேபி (28). இவர் கோவை ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த காவலர் வீரமணி (30) என்பவரும் 5 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஏப். 1ம் தேதி வீரமணி வேறு ஒரு பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டார். இதனால் மனஉளைச்சலில் இருந்த பேபி, ட்டில் விஷமருந்தி மயங்கினார்.

உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், காவலர் பேபியை காதலித்து ஏமாற்றி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து வீரமணியை, டிஎஸ்பி குமரேசன் (பொறுப்பு), தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், எஸ்ஐ மோகனப்பிரியா ஆகியோர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.