கோவை அருகே மதுக்கரை வனப்பகுதியில் மின் மாற்றியில் இருந்த மின்கம்பியை துதிக்கையால் பிடித்து இழுத்த யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்தது சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பது குறிப்பிடத்தக்கது. வனப்பகுதியை ஒட்டியுள்ள தோட்ட பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், யானை மின் மாற்றி அருகே சென்றபோது அங்கிருந்த கம்பியை துதிக்கையால் பிடித்து இழுத்ததாகவும், அதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்த வந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று யானையின் உடலை கைப்பற்றி பரிசோதனை செய்தனர். மேலும், வனப்பகுதியை ஒட்டிய தோட்டங்களுக்கான மின்சார கட்டமைப்புகளை யானைகள் அணுகாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளிடம் வனத்துறை வலியுறுத்தப்பட்டுள்ளது.

More Stories
கர்நாடகாவைச் சேர்ந்தவரை டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்? – தமிழக அரசுக்கு வேல்முருகன் கேள்வி
சேலத்தில் இரண்டு லட்சம் ரூபாய்க்கு பச்சிளம் பெண் குழந்தை விற்பனை…
உடுமலை அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் 3 தொழிலாளர்கள் பலி…