September 19, 2026

50 ஆண்டுகளாக அதிமுக வெற்றிபெறாத ஒரே தொகுதி…

தமிழக அரசியல் வரலாற்றில் அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், சென்னையின் இதயப்பகுதியான எழும்பூர் தொகுதியில் அக்கட்சி இதுவரை ஒருமுறை கூட நேரடியாக வெற்றி பெற்றதில்லை என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

1957 முதல் திமுகவின் கோட்டையாக திகழும் இத்தொகுதியில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திலும் இரட்டை இலை சின்னம் வெல்லாத நிலையில், 2026 தேர்தலில் அதிமுக சார்பில் அபிஷேக் ரங்கசாமி களம் இறக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது