திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (45), இவருக்கு இதயம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் நோய் உள்ளதாக கூறப்படும் நிலையில் இதற்காக அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். இவரின் தம்பி இறந்த நிலையில் அவரது மகளான சத்தியா மற்றும் கேசவன் என்பவருக்கு தானே முன் நின்று திருமணம் செய்து வைத்துள்ளார்
அதேபோல் அவர்களுடைய வளைகாப்பு விழாவையும் முருகன் முன்னிலையில் நடத்த திட்டமிடப்பட்டு விழாவுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் அவரே முன்னின்று நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பிற்பகல் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த உறவினர்களுக்கும், பேண்ட் செட் குழுவினருக்கு மதுபானம் வாங்குவதற்காக சென்னசமுத்திரம் கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடைக்கு சென்று முருகன் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு வெளியே வரும் பொழுது செங்கம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி தலைமையான போலீசார் முருகனை மடக்கி அவரிடமிருந்த மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்வதற்காக காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து மதியம் முதல் இரவு வரை முருகனை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் விடுவிக்காததால் நேற்று இரவு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் தனது தந்தையாக இருந்து தனக்கு அனைத்தும் செய்து தருவார் என எதிர்பார்த்த சித்தப்பா வராததால் சத்தியாவுக்கு வேதனை ஏற்பட்டது.

More Stories
கடலூரில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை.. தீவிர விசாரணை…
கரூர் அருகே காருக்குள் விளையாடிய சிறுவன் மூச்சுதிணறி பலி…
கடற்கரை மணலுக்குள் புதைக்கப்பட்ட சடலத்தின் பாதி கால்… பொதுமக்கள் அதிர்ச்சி …