தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 82.24 சதவீதம் பதிவானது.
தமிழகத்தில் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் சென்னையில் டோக்கன் பெற்றவர்கள் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர் குமரகுருபரன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 4.71 கோடிக்கு மேல் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 82.24 சதவீதம் பதிவானது.
மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு முடிவடைந்தது. உடனே வாக்குச் சாவடியின் கதவுகள் மூடப்பட்டன. இதனால் வாக்குச் சாவடிக்குள் 6 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வரிசையில் நின்று வாக்களிக்கலாம். மற்ற இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு அவை ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்படும். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 62 மையங்களில் எண்ணப்படும். இந்த நிலையில் சென்னையில் டோக்கன் பெற்றவர்கள் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர் குமரகுருபரன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க மக்கள் பேருந்துகள், ரயில்களில் பயணித்திருந்த நிலையில் பலருக்கு பேருந்து கிடைக்காமல் பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் வாக்குப் பதிவை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என்றும் பேருந்து கிடைக்காதவர்களுக்கு உடனே பேருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என தவெக தலைவர் விஜய், தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். எனினும் வாக்குப் பதிவு நேரம் நீட்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
வேலை நாளான வியாழக்கிழமை தேர்தலை நடத்தியது பாராட்டத்தக்கது – நடிகர் வடிவேலு
எனக்கு பதிலாக போடப்பட்ட ஓட்டை கேன்சல் செய்ய வேண்டும்… பெண் பரபரப்பு புகார்….
முன்னாள் காதலனின் மனைவி கொடூர கொலை….