சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கும் வகையில் இன்று 6132 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
அறிக்கையில், சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் சேர்த்து 6,132 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, வாக்குப்பதிவு நாளான நாளை 1505 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் வசதிக்காக கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் மற்றும் மாதவரத்திற்கு மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!