September 10, 2026

“வடசென்னை” உலகத்தில் இணைந்த விஜய்சேதுபதி – படம் எப்போது வெளியாகும்..?

வெற்றிமாறன் – சிம்பு- கலைப்புலி எஸ்.தாணு கூட்டணியில் உருவாக்க உள்ள “அரசன்” திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அரசன் ‘ப்ரோமோ’

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள “அரசன்” திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாகவும்; அனிருத் இசையமைப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.

அதனை தொடர்ந்து கடந்த மாதம், அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு “ப்ரோமோ” வீடியோவும் வெளியிடப்பட்டது. அதில் இயக்குநர் நெல்சனும் இடம்பெற்றிருந்தார்.

வில்லனாக விஜய்சேதுபதி யா..?

இந்தப் படம் ‘வடசென்னை’ திரைப்படத்தின் பின்னணியில், அதே உலகத்தில் நடக்கும் ஒரு புதிய கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும்,‘விஜய்சேதுபதி வில்லனாக’ நடிக்க வாய்ப்புள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

தள்ளிப்போன ‘வடசென்னை’

வடசென்னை படத்தில் ‘அமீர்’ நடித்த ‘ராஜன்’ கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. ‘கால்சீட்’ பிரச்னையால் விஜய்சேதுபதி விலகிக்கொள்ள அமீர், ராஜன் பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

வெற்றிமாறன் – விஜய்சேதுபதி

வெற்றிமாறன் இயக்கத்தில் இறுதியாக வெளியான “விடுதலை-1”; “விடுதலை-2” ஆகிய இரண்டு படங்களிலும் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆனால் “அரசன்” படத்தில் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை என்றும் இதனால் படம் வெளியாக தாமதம் ஏற்படலாம் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

You may have missed