September 10, 2026

மீண்டும் கவர்ச்சி நடனம் ஆடிய நடிகை மீனாட்சி சவுத்ரி – பாடல் செம வைரல்!

தெலுங்குவில் வெளியான “பீமாவரம் பல்மா” பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. அதில், மீனாட்சி சவுத்ரி ஆடிய நடன புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொங்கல் வெளியீடு!

வரும் பொங்கல் பண்டிகை யொட்டி தெலுங்கு திரையுலகில் வெளியாக உள்ள “அனகனக ஓக ராஜு” படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில், நவீன் பாலிஷெட்டிக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மாரி இயக்கி இருக்கும் இப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார்.

பீமாவரம் பல்மா பாடல் ஹிட்

மறுபுறம், மீனாட்சி சவுத்ரி, நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ’விருஷகர்மா’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை கார்த்திக் வர்மா இயக்குகிறார். “அனகனக ஓக ராஜு” படத்தை நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து தயாரித்துள்ளனர்.

நடிகர் நவீன் பொலிஷெட்டி, இந்தப் படத்திலிருந்து தற்போது வெளியாகி உள்ள “பீமாவரம் பல்மா” பாடலின் மூலம் பாடகராக அறிமுகமாகி இருக்கிறார். சந்திரபோஸ் பாடல் வரிகளை எழுத, நவீன் பொலிஷெட்டியுடன் நுடனா மோகனும் பாடியுள்ளார்.

மீனாட்ச சவுத்ரியின் நடனம்

இதில் பாடல் யூடிப்பில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளதற்கு முக்கிய காரணம் நடிகை மீனாட்சி சவுந்திரி. “லக்கி பாஸ்கர், விஜய்யின் GOAT” என மீனாட்சி சவுத்ரி நடித்த படங்கள் எல்லாம் ஹிட் தான்.

“பீமாவரம் பல்மா” பாடலில் செம கவர்ச்சியாக குத்தாட்டம் போட்ட புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மீனாட்சி சவுத்ரியை கொண்டாடி வருகின்றனர்.

You may have missed