September 10, 2026

அரசு பேருந்துகள் மோதி கோர விபத்து – பலி எண்ணிக்கை 11ஐ தாண்டும் என தகவல்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

கோர விபத்த

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் உட்கோட்டம், நாச்சியார்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட விவேகனந்தா பாலிடெக்னிக் கல்லூரி அருகில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.

11பேர் உயிரிழப்பு

காங்கேயத்தில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்தும், காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தும் நேருக்கு – நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 11பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காரைக்குடி அரசு மருத்துவமனை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் பெற்று வருகின்றனர்.


மேலும் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த நபர்களை மீட்டனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணைக்கண்காணிப்பாளர், திருப்பத்தூர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்கள்.

அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

இந்த விபத்து குறித்து, முதல்வர் ஸ்டாலின், இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தவெக கட்சி தலைவர் விஜய், ராமதாஸ், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சித் தலைவர் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

You may have missed