September 10, 2026

மனிரத்னம் – விஜய்சேதுபதி – சாய்பல்லவி கூட்டணியில் புது படம் – காதலும், காதல் சார்ந்த கதையும்!

இயக்குநர் மனிரத்னம், நடிகர் விஜய்சேதுபதி மீண்டும் இணைய உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நாயகியாக, சாய் பல்லவி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய்சேதுபதி படு பிஸி:-

நடிகர் விஜய்சேதுபதி தற்போது விஜய் டிவியின் ‘பிக்பாஸ் சீசன்-9’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதனால், அடுத்த 2 மாதங்களுக்கு சார் பிஸி தான். இதற்கிடையில், வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’, ரஜினியின் ‘ஜெயிலர்-2’, இயக்குநர் பாலாஜி தரணிதரன் உடன் மற்றொரு புது படம் என அடுத்தடுத்து பிஸி அட்டவணையில் நடிகர் விஜய்சேதுபதி உள்ளார்.

மனிரத்னம் – விஜய்சேதுபதி கூட்டணி

தற்போது, இயக்குநர் மனிரத்னம் – நடிகர் விஜய்சேதுபதி கூட்டணியில் ‘காதல்’ சார்ந்த ஒரு புதிய உருவாக உள்ளது.

மணிரத்னம், விஜய் சேதுபதி, சாய் பல்லவி இணையும் படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.இதன் படப்பிடிப்பு மற்றும் இதர தொழில்நுட்ப விவரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, மணிரத்னம் இயக்கிய “செக்க சிவந்த வானம்” படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed