சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தவெக சார்பில் நடந்த ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறறதுயி. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டார்.

நம்ம மக்களோடு டீம்

நோன்பு திறப்பு நிகழ்ச்சி முடிந்து பேசிய தவெக தலைவர் விஜய், “நாம் அரசியலுக்கு வந்ததிலிருந்து, நம்மைப் பற்றி நிறைய வதந்திகள் பரப்பிவருகிறார்கள். அந்த டீம், இந்த டீம் என சொல்லிவருகிறார்கள். ஆனால் இவர் எந்த டீமும் கிடையாது மக்களோடு டீம் என மக்களுக்குத் தெரிந்த பிறகு, வேற என்ன அவதூறு பரப்பலாம் என முயற்சி செய்து, அதுவும் வொர்க் அவுட் ஆகவில்லை.

மதசார்பற்ற கொள்கை தான்…

இங்கு ஓப்பனாக, தெளிவாக சொல்கிறேன். நான், நாங்கள் மதச்சார்பற்ற கொள்கையில், நிலைப்பாட்டில் சமரசம் வைத்துக்கொள்ள மாட்டோம். நம்முடைய தலைமையில் தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம்.” இவ்வாறு பேசினார்.