ஓரிரு நாட்களில் பாமக யாருடன் கூட்டணி என்பதை ராமதாஸ் அறிவிப்பார் என்று பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, “வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அனைவருடனும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. நிர்வாகக் குழு உறுப்பினர்கள் டாக்டர் ராமதாசிடம் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். விரைவில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டாக்டர் ராமதாஸ் வெளியிடுவார்” என்றார்.
ஓரிரு நாட்களில் அறிவிப்பு வரும்
தொடர்ந்து பேசிய அவர், “எந்தக் கூட்டணி சரியாக இருக்கும், மக்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறது. எந்த தொகுதியில் வெற்றி பெற முடியும் என்பதையெல்லாம் கணக்கில் கொண்டு தான் ஆலோசித்து வருகிறோம். டாக்டர் ராமதாஸ் தலைமையில் கட்சிக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் வதே முக்கியம். விரைவில் நல்ல கூட்டணி மையும். கூட்டணி குறித்த முழுமையான விவரங்களை இன்னும் ஓரிரு நாட்களில் பாமக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.” என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையோடு ராமதாஸ்:
“சின்னம் (மாம்பழம்) கிடைப்பதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். அது நீதிமன்றத்தில் இருக்கும் பிரச்சினை. நீதிமன்றத்தின் மூலம் நல்ல முடிவு வரும் என்று டாக்டர் ராமதாஸ் நம்பிக்கையோடு இருக்கிறார்.” என்று ஜி.கே.மணி கூறியுள்ளார்.






