சாத்தான்குளம் தந்தை-மகன் (ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்) மரண வழக்கை, மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் விசாரணை நடத்தி இன்று தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்

தீர்ப்பு விவரங்கள்

கடந்த 2020ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கொரோனா ஊரடங்கின் போது, தந்தை-மகன் இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ (CBI), சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டியிருந்தது. தற்போது அது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு 9 காவலர்களும் குற்றவாளி என தீர்ப்பாகியுள்ளது

குற்றவாளிகளின் பெயர்கள் மற்றும் தண்டனை

​நீதிமன்றம் இந்த வழக்கில் தொடர்புடைய 9 காவலர்களும் குற்றவாளிகளே… அவர்களின் பெயர்கள்…

ஸ்ரீதர் – காவல் ஆய்வாளர்;

பாலகிருஷ்ணன் – உதவி ஆய்வாளர்;

ரகு கணேஷ் – உதவி ஆய்வாளர்;

முருகன்  – தலைமைக் காவலர்;

சாமதுரை  – தலைமைக் காவலர்;
வெயில்முத்து  – காவலர்;
தாமஸ் – பிரான்சிஸ் காவலர்;
முத்துராஜ்  – காவலர்;
செல்லத்துரை – காவலர்

இந்த 9 காவலர்களுக்கும் தண்டனை விவரங்களை அடுத்த மாதம் 30ஆம் தேதி நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.