September 10, 2026

அதிமுக கூட்டணியில் தொகுதிகளை பங்கீட்டு கொண்ட “பாஜக, பாமக, அமமுக”

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு இன்று முடிவு செய்யப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சி பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார். இதில் பாமக , அமமுக உள்ளிட்ட முக்கிய கூட்டணி கட்சிகள் இடம்பெற்றன.

தொகுதிகள் பங்கீடு

பாஜக கட்சிக்கு – 27 தொகுதிகளும்;

அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும்;

டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சிக்கு 11 தொகுதிகளும் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்னும் முடிவாகவில்லை..!

அதே சமயத்தில் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் என்ற கட்சிக்கும்; ஜி.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இந்த இருவரும் தொகுதி பங்கீடு  தொடர்பாக பேசுவதற்கு, அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed