பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் விசிக போட்டியிட உள்ளதாகவும், அக்கட்சி சார்பில் பொன்னேரி தொகுதியில் மக்கள் செல்வாக்கு உள்ள ‘லெனின் அன்பரசு’ போட்டியிட உள்ளதா தகவல் வெளியாகி உள்ளது.
விசிக-வின் அதிரடி முடிவு :-
சென்னை கோயம்பேடு தனியார் விடுதியில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இரட்டை இலக்கத் தொகுதிகளுடன் + ஒரு மாநிலங்களவை இடத்தைப் பெற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொன்னேரி தொகுதியில் ‘லெனின் அன்பரசு’
இந்நிலையில், பொன்னேரி (தனி) சட்டமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட “லெனின் அன்பரசு” எனபவர் கட்சித் தலைமையிடம் விருப்ப மனு அளித்துள்ளார்.
பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் ‘லெனின் அன்பரசு’ தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கும்; பட்டியலின மக்களுக்கும் ஆதரவுக் குரல் கொடுப்பத்துடன் அவர்களுடன் இணைந்து பல்வேறு களப்பணிகளிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டு உள்ளார்.

பொன்னேரி மக்களின் நம்பிக்கை ‘லெனின் அன்பரசு’:
விருப்ப மனு அளித்த பிறகு லெனின் அன்பரசு கூறியதாவது, “பொன்னேரி தொகுதியில் தான், நான் பிறந்து வளர்ந்து பள்ளி படிப்பை முடித்தேன், இங்கு வசிக்கும் மக்களின் தேவைகளும்; கோரிக்கைகளும் இன்னும் பல நிறைவேற்றாமல் இருக்கிறது. அதை நிறைவேற்ற வேண்டும் என்பது தான், என்னுடைய முதல் குறிக்கோள்”
தொடர்நது பேசிய அவர், “தொகுதி மக்களோடு… மக்களாக தான்.., நான் ரொம்ப நாளா பயணிச்சீட்டு வரே, கட்சியோடு சேர்ந்து பல்வேறு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கேன். அதனால் எனக்கு மக்கள் ஆதரவு எப்போதும் உண்டு..” என்றார்.
மக்கள் கருத்து :-
பொன்னேரி தொகுதியை பொறுத்த வரைக்கும் அது “தனி தொகுதி”. பட்டியலின மக்களும்; தொழிலாளர்களும் அதிகம் வசிக்கக்கூடிய பகுதி. சென்ற முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் வசம் பொன்னேரி தொகுதி ஒப்படைக்கப்பட்டது.

இந்த முறை ‘விசிக’வுக்கு பொன்னேரி தொகுதியை ஒதுக்கினால், விசிக நிச்சயம் வெற்றி பெறும் என்ற கருத்து நிலவுகிறது. ‘லெனின் அன்பரசன்’ அவர்களுக்கும் பொன்னேரி தொகுதியில் வலுவான செல்வாக்கு உள்ளதால் வெற்றிபெறும் வாய்ப்பு சுலபமென்று பொன்னேரி தொகுதி வாக்காளர்கள் கூறுகிறார்கள்.
பொன்னேரி- விசிக..?
அதேசமயம் பொன்னேரி தொகுதியில் விசிக-வுக்கு ஒதுக்கப்படும் எனவும், விசிக சார்பில் லெனின் அன்பரசு போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது






