September 10, 2026

ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் ரூ.93,760

சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 1600 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 93,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம், தங்கத்தின் தேவை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 22) அன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 11,630 ரூபாய்க்கும், சவரன் 93,040 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிராமிற்கு 110 ரூபாய் குறைந்து 11,520 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 880 ரூபாய் சரிந்து, 92,160 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்த நிலையில், இன்று (நவம்பர்,25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் 93,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 200 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 11,720 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து 174 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

You may have missed