September 10, 2026

தங்கம், வெள்ளி விலையேற்றம் – மேலும் விலையேற வாய்ப்பு..!

22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ரூ.13,170க்கும், சவரனுக்கு; ரூ.400 உயர்ந்து, 1 லட்சத்து 5 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


தங்கம் விலை

நேற்று ஒருவர் கிராம் ஆபரண தங்கம் ரூ. 13,120க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 13,170க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரண தங்கமானது ரூ. 1,04,960க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.400 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 1,05,360க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, இந்திய நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே போட்டி போட்டுக்கொண்டு விலை அதிகரித்து வருகிறது. இதனால், பெண்களும், பெண் பிள்ளைகளின் பெற்றோர்களும் வருத்தத்தில் இருக்கின்றனர்.

மேலும் விலையேற வாய்ப்பு:-

இந்த விலையேற்றத்துக்கு உலக பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பண வீக்கம், டாலர் மதிப்பு வீழ்ச்சி போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்பட்டாலும், பங்குச்சந்தை நஷ்டம் முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது.

நாளை முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் சற்று அதிகரிக்க வாய்பபு உள்ளதாக கூறப்படுகிறது.

You may have missed