September 10, 2026

ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி:பம்பையில் இருந்து தென்காசி இடையே சிறப்பு பேருந்து

சபரிமலை சீசனை முன்னிட்டு பம்பையில் இருந்து தென்காசி இடையே சிறப்பு பேருந்து வசதி இன்று (நவம்பர் 29) தொடங்குகிறது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து இருமுடிகட்டி வழிபடச் செல்கின்றனர். இந்த நிலையில், தமிழக பக்தர்கள் வசதிக்காக பம்பையில் இருந்து நேரடியாக தமிழ்நாட்டிற்கு பேருந்து சேவையை கேஎஸ்ஆர்டிசி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக கோவை- பம்பை இடையே சிறப்பு பேருந்து சேவை நேற்று (நவம்பர் 28) தொடங்கியுள்ளது. அதன்படி கோவையில் இருந்து இரவு 9.30 மணிக்கும், பம்பையில் இருந்து காலை 9 மணிக்கும் பஸ்கள் இயக்கப்படும்.

இதுபோல் இன்று (நவம்பர் 29) முதல் பம்பை – தென்காசி இடையே சிறப்பு பேருந்து வசதி தொடங்குகிறது. இந்த பேருந்துகள் தென்காசியில் இருந்து மாலை 7 மணிக்கும், பம்பையில் இருந்து காலை 9 மணிக்கும் இயக்கப்படும். இதனால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவை தவிர பழநி, திருநெல்வேலி, கம்பம் மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கர்நாடகாவிற்கும் பேருந்துகள் இயக்கப்படும். நகரங்களுக்கு இடையேயான சேவைகளை இயக்க 67 கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளுக்கு புதிதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

You may have missed