September 10, 2026

சென்னைக்கு மிக அருகில் ‘டிட்வா’ புயல்… 54 விமான சேவைகள் ரத்து

வங்கக் கடலில் உருவான ‘டிட்வா’ புயல் சென்னையில் இருந்து 400 கிமீ தொலைவில் நகர்ந்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 54 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இலங்கை கடல் பகுதியில் உருவான ‘டிட்வா’  புயல், அந்நாட்டில் மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. புயலால் ஏற்பட்ட கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமானோரின் உடமைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அத்துடன் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மாயமான 21 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டிட்வா புயலால் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் 20,500 ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபள்ளனர்.

இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய ‘டிட்வா’ புயல் தற்போது வடபகுதியை கடந்து தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை வரை மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயல் தற்போது மணிக்கு 8 கிமீ வேகத்தில் நகருகிறது. டிட்வா புயலானது சென்னையில் இருந்து தெற்கு தென்மேற்கு திசையில் 400 கிமீ தொலைவில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், , கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் நாகப்பட்டினத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ‘டிட்வா’ புயலால் சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 54 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

You may have missed