September 9, 2026

விருதுநகர் : திமுக இளைஞரணி மாநாட்டில் இபிஎஸ்-யை கலாய்த்து தள்ளிய உதயநிதி ஸ்டாலின்

“இந்தியாவிலேயே எடப்பாடி பழனிசாமிதான் முரட்டு அடிமை” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகரில் நடைபெற்ற திமுக விழாவில் விமர்சித்துள்ளார்.

விருதுநகரில் பிரமாண்டமாக நடைபெற்ற திமுக இளைஞர் அணி மாநாட்டில், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது, “சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம்போல, தமிழகத்துக்கு எந்தத் திட்டத்தையும் தரவில்லை என்றும் பட்ஜெட்டை அறிவித்து முடிப்பதற்கு முன்னரே, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து சொல்கிறார். இந்தியாவிலேயே எடப்பாடி பழனிசாமிதான் முரட்டு அடிமை என்று கலாய்த்து விட்டார்.

“இவ்வளவு நாள்களாக, பாஜகவின் கிளையாக அதிமுக இருந்தது. ஆனால், தற்போது பாஜகவின் இலையாக மாறிவிட்டது.இ ந்தியாவிலேயே 5 லட்சம் நிர்வாகிகள் மற்றும் மொத்தம் 50 லட்சம் தொண்டர்களைக் கொண்ட ஒரே கட்சி திமுகதான்” என்று பெருமிதம் தெரிவித்தார்.

நமது இளைஞர் அணி, மக்கள் பணியையும் கட்சிப் பணியையும் மேற்கொண்டு, மக்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது, என்றார்.

எவ்விதக் கட்டுப்பாடும் ஒழுக்கமும் இல்லாமல் செயல்படுபவர்களும், எந்தக் கொள்கையும் இல்லாமல் கோஷமிடுபவர்களும் மக்களுக்கு எந்தப் பயனையும் தர மாட்டார்கள்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

You may have missed