September 10, 2026

முதல் புயல்.. நாளை 7 மாவட்ட மக்களுக்கு அலர்ட்

இந்த 2026ம் ஆண்டின் முதல் புயல் வங்கக் கடலில் நாளை உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்நிலையில், நாளை திருவாரூர், நாகையில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் புயல்.. நாளை மழை..?

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 15 கிமீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் உருவானால் 2026-ன் முதல் புயலாக இது இருக்கும். இதன் தாக்கத்தால் இன்று நள்ளிரவில் மழையும், நாளை கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

You may have missed