September 10, 2026

தெருவில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை – அரசு ஊழியர் கைது

சென்னை மயிலாப்பூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் தொல்லை

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் ஆஸ்டின். 47 வயதாகும் இவர் தமிழ்நாடு ‘காதி கிராப்ட்’ நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்கிறார். இவர் கடந்த 28ஆம் தேதி இரவு சென்னை சாந்தோம் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஆன்லைனில் அளித்த புகார்

இதுதொடர்பாக, அந்த இளம்பெண் ஆன்லைன் மூலமாக மயிலாப்பூர் போலீஸ் நிலையத்துக்கு புகார் மனு அனுப்பினார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அரசு ஊழியர் கைது

இச்சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், ஆஸ்டின் புகார் அளித்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து, மயிலாப்பூர் போலீசார் ஆஸ்டினை கைது செயதனர்.

You may have missed