September 10, 2026

திண்டிவனத்தில் வளர்ச்சி பணிகள் என்னாச்சு..? முதல்வருக்கு ராமதாஸ் வைத்த கோரிக்கைகள்

“திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள திண்டிவனம் பேருந்து நிலையத்தை நேரில் வந்து திறந்துவைத்து, மூடநம்பிக்கைக்கு முடிவுகட்டி, பகுத்தறிவு பாதையில் தொடரும் இயக்கம் திமுக என்பதை மெய்பிக்க வேண்டும் ” என்று
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திண்டிவனத்தில் 2000-ஆம் ஆண்டு புதிதாக கட்டப்பட்ட மேம்பால திறப்பு விழா 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ம் தேதி முதலவர் கருணாநிதி திறந்துவைத்தார். இம்மேம்பாலம் அமைய காரணமான மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஜி.வெங்கட் ராமனின் அரசியல் வாழ்க்கை அஸ்தனமனமானது.

இதனை தொடர்ந்து திண்டிவனத்தில் 1971-ம் ஆண்டில் இந்திரா காந்தி பேருந்து நிலையம் திண்டிவனத்தின் வளர்ச்சி மற்றும் போக்குவரத்து பெருக்கத்தின் காரணமாக இந்த பேருந்து நிலையம் பயன்பாடின்றி போனது. பின்னர் 1991-ம் ஆண்டு, ‘திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்’ என அப்போதைய தென்னாற்காடு மாவட்ட ஆட்சியர் கரியாலி அறிவித்தார். இதனை தொடர்ந்து அவர் பணிமாறுதல் செய்யப்பட்டார். அதோடு பேருந்து நிலைய பணிகள் நின்றுபோயின” என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதிமுக ஆட்சியில் இதே கதைதான் தொடர்ந்ததாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போது, “திண்டிவனத்தில் வளர்ச்சிப்பணிகள் என்றாலே அதிகாரத்தில் உள்ளவர்கள் அலறி அடித்து ஓடும் நிலை என்ற மூடநம்பிக்கை வேரூன்றிபோனது என்றும், திண்டிவனம் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ள மூடநம்பிக்கையை முதல்வர் ஸ்டாலின் உடைத்தெறிய வேண்டும்” என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

You may have missed