September 10, 2026

குரூப்-2/2A தேர்வில் குளறுபடிகளை அடுத்து, புதிய தேர்வு கட்டுப்பாடு அலுவலர் நியமனம் : டிஎன்பிஎஸ்சி உத்தரவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) புதிய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக ஸ்ரீ வெங்கட பிரியா  நியமிக்கப்பட்டுள்ளார்.

​நேற்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் 2A முதன்மைத் தேர்வுகளில் ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் தேர்வு மைய ஒதுக்கீட்டில்  குழப்பங்கள் ஏற்பட்டது. இதன் காரணமாக, தேர்வாணையம் அந்தத் தேர்வை ஒத்திவைத்தது.

அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

இந்தச் சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேவை தலைவர் பிச்சை இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் சண்முகம் வீட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையாக, அதுவரை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த சண்முகசுந்தரம் மாற்றப்பட்டு, தற்போது வெங்கட பிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

​புதிய அலுவலர்:

வெங்கட பிரியா ஐஏஎஸ், இவர் இதற்கு முன்பு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராகப் பணியாற்றி வந்தார்.

​நடவடிக்கைக்கான காரணம்:

குரூப்-2 முதன்மைத் தேர்வில் ஹால் டிக்கெட்டுகளில் முகவரி மாறியிருந்தது மற்றும் தேர்வு மையங்களில் ஏற்பட்ட குளறுபடிகள்.

​அடுத்த கட்டம்:

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதி மற்றும் புதிய தேர்வு மைய விவரங்கள் 15 நாட்களுக்கு முன்பாக தேர்வர்களுக்குத் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed