September 10, 2026

அப்பல்லோவில் அட்மிட்…. கார்த்தி சிதம்பரத்திற்கு என்ன ஆச்சு?

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும்  இருப்பவர் கார்த்தி சிதம்பரம். இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கார்த்தி சிதம்பரம் வயிறு தொடர்பான பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

You may have missed